Friday, September 09, 2005

sergi bubka - Asif Meeran

Date: Fri, 09 Sep 2005 13:20:23 +0400
From: Asif Meeran
Subject: sergi bubka - kavithai

எல்லாமும் எல்லாருக்கும்..
======================

அவன் பேசுவது
சரியில்லை
என்றான் இவன்

இவனுக்கு
ஒன்றும் தெரியவில்லை
என்று அவன்

அவனுக்கும் இவனுக்கும்
என்ன தெரியும்
என்றான் இன்னொருவன்

இன்னொருவனுக்கு
உளறத்தான் தெரியும்
மற்றொருவனின் கண்டுபிடிப்பு

எவன் சொல்வதையும்
கேட்கும்
மனநிலையில் இல்லாமல்
என்போக்கில்
எதையாவது சொல்லத் துடிக்கிறேன்
நான்

அவனோ இவனோ
எவனோ
நான் சொல்வது சரியில்லை
என்று சொல்லக் கூடுமென்பதை
முற்றாக உணர்ந்திருந்த போதும்.

சொல்வதில்
என்ன இருக்கிறதோ இல்லையோ
சொல்வதற்கு மட்டும்
எப்போதும் எல்லோருக்கும்
நிறையவே இருக்கிறதென்பதையும்

அன்புடன்,
ஆசிப் மீரான்

No comments: